தமிழகம்

ஜோக்கர் முகமூடியுடன் ATM இல் திருடவந்த திருடன்!! இயந்திரத்தை உடைத்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. வைரல் வீடியோ..

Summary:

ஜோக்கர் முகமூடியுடன் ATM இயந்திரத்தில் இருக்கும் பணத்தை திருட முயன்ற திருடன் ஏமாற்றத்தில்

ஜோக்கர் முகமூடியுடன் ATM இயந்திரத்தில் இருக்கும் பணத்தை திருட முயன்ற திருடன் ஏமாற்றத்தில் திரும்பிச்சென்ற வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்த சம்பவம் கன்னியாகுமரி அருகே உள்ள குறும்பனை மீனவ கிராமத்தில் நடந்துள்ளது. ஜோக்கர் முகமூடி அணிந்துகொண்டு, கையில் கடப்பாரையுடன் ATM மையத்திற்குள் வந்த திருடன் ATM இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து, அதில் இருந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளான்.

ஆனால் பணம் இருந்த பெட்டியை அவனால் உடைக்கமுடியாததை அடுத்து, அந்த திருடன் விரக்தியுடன் அங்கிருந்து புறப்பட்டான். இந்த காட்சிகள் அனைத்தயும் ATM மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில், தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், முகமூடியுடன் வந்த திருடன் யார்? என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement