வடிவேலு பாணியில் வெங்காயத்தை திருடிய நபர்! சிசிடிவி காட்சியால் சிக்கிய சுவாரசியம்.!

வடிவேலு பாணியில் வெங்காயத்தை திருடிய நபர்! சிசிடிவி காட்சியால் சிக்கிய சுவாரசியம்.!


Man steeling onion from shop video goes viral

கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. கிலோ 20 , 30 ரூபாய் என விற்கப்பட்ட வெங்காயம் தற்போது 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெங்காயத்தின் விலையை வைத்து பல்வேறு காமெடி வீடியோக்கள், மீம்ஸ் போன்றவையும் வெளியாகி வைரலாகிவருகிறது.

இந்நிலையில் மதுரையில் இருக்கும் ஒரு மளிகை கடையில் முதியவர் ஒருவர் வடிவேலு பாணியில் வெங்காயம் திருடும் காட்சிகள் வெளியாகி வைரலாகிவருகிறது. அப்துல் ரஹ்மான் என்ற அந்த நபர் குறிப்பிட்ட மளிகை கடை முதலாளிக்கு தெரிந்தவராம்.

onion

இதனை காரணமாக வைத்து, தினமும் கடைக்கு வருவதும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி கடையில் வேலை செய்யும் வேலையாட்களின் கவனத்தை திசை திரும்புவதும், அந்த நேரத்தில் சாமர்த்தியமாக காய்கறி, வெங்காயம் போன்றவற்றை திருடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இதுகுறித்து கடை ஊழியர்கள் அவர் மீது சந்தேகம் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்த CCTV காட்சிகளை சோதனை செய்ததில் அந்த நபர் பொருட்களை திருடுவது உறுதி செய்யப்பட்டு தற்போது அவர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.