அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"என்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டியா.." மாணவர்கள் முன் ஆசிரியை கொலை.!! வாலிபர் வெறி செயல்.!!
தஞ்சை அருகே வகுப்பறையில் வைத்து பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இளைஞரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வகுப்பறையில் வைத்து கொலை செய்யப்பட்ட ஆசிரியை
தஞ்சை அருகே உள்ள மல்லிப்பட்டினம் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரமணி(26). இன்று காலை பள்ளியில் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மதன் என்ற நபர், ரமணியை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். இதனைக் கண்ட மாணவர்கள் அலறி கூச்சலிட்டனர்.
இதையும் படிங்க: மது குடிப்பதில் தகராறு... ஏமானாக மாறிய நண்பர்கள்.!! இளைஞர் படுகொலை.!!
கைது செய்யப்பட்ட குற்றவாளி
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மதனை கைது செய்தனர். இதனையடுத்து கொலை செய்யப்பட்ட ரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் கொலைக்கான காரணம் வெளியாகி இருக்கிறது.
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை
மதனிடம் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரமணி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். அவர் வீட்டிற்கு பெண் கேட்டு சென்றபோது விருப்பமில்லை என்று கூறியதால் அவரை குத்தி கொலை செய்தேன் என காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மதன் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை சிறையிலடைத்தது.
இதையும் படிங்க: சுற்றி வளைத்த கும்பல்... தலைமை ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்.!! 2 இளைஞர்கள் கைது.!!