அண்ணியின் தங்கை மீது தீராத ஆசை.! தனியே வரவைத்து இளைஞர் செய்த காரியம்.! அதிரவைக்கும் சம்பவம்.man-killed-relative-girl-due-to-love-issue

அண்ணியின் தங்கை மீது ஆசைகொண்ட வாலிபர் ஆசை நிறைவேறாததால் அவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கத்தில் தனது அண்ணன் மற்றும் அண்ணியுடன் வசித்துவந்துள்ளார் கார் ஓட்டுநரான சந்தோஷ். இந்நிலையில், பல்லாவரத்தில் லேப் டெக்னீஷியனாக வேலைபார்த்துவரும் சந்தோஷ் அண்ணியின் தங்கை அகிலா அவ்வப்போது தனது அக்கா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இதனிடையே அகிலா மீது சந்தோஷிற்கு காதல் ஏற்படவே, தனது காதலை அகிலாவிடம் கூற சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். இந்நிலையில்தான் அண்ணனும், அண்ணியும் பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு செல்லவே, அகிலாவை வீட்டிற்கு வரவைத்து தனது காதலை அவரிடம் கூறியுள்ளார் சந்தோஷ்.

Murder

அகிலா தான் வேறொருவரை காதலிப்பதாக கூறியும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சந்தோஷ் அகிலாவை வற்புறுத்தியுள்ளார். அகிலா மறுக்கவே அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அகிலாவை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று வீட்டின் கதவில் தலையில் இடித்து அகிலா மயங்கி விட்டதாக கூறியுள்ளார்.

அகிலாவை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தோஷ் அகிலாவை கொலை செய்ததை விசாரணையின் மூலம் கண்டறிந்தனர். எனவே, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.