தமிழகம் 18 Plus

நண்பனின் மனைவியுடன் உல்லாசம்! கடைக்குள் இருந்து துர்நாற்றம்! ஒரு பகீர் சம்பவம்.

Summary:

Man killed friend for wife illegal relationship

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் இன்பவளவன். அந்த பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்த இவரும், மகேந்திரன் என்பவரும் நெருக்கமாக பழகியுள்னனர். இந்நிலையில் இன்பவளவன் அடிக்கடி மகேந்திரனின் வீட்டிற்கு சென்றுவந்ததில் இன்பவளவனுக்கும், மகேந்திரனின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் நாளடைவில் மகேந்திரனுக்கு தெரியவர தனது மனைவியை கண்டித்துள்ளார் மகேந்திரன். ஆனால், மகேந்திரனின் மனைவியுடன் பேசுவதை இன்பவளவன் நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மகேந்திரன் இன்பவளவனின் டெய்லர் கடைக்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் அதிகமான நிலையில் அருகில் இருந்த நாற்காலியை எடுத்து மகேந்திரன் இன்பவளவனின் தலையில் அடித்தும், கயிறால் அவரது கழுத்தை நெரித்தும் கொலை செய்துவிட்டு, மேலும் கடையை வெளிபுறமாக பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

Image result for crime

இந்நிலையில் இன்பவளவனை சில நாட்களாக காணவில்லை, அவரது கடையும் திறக்கப்படாத நிலையில் கடையில் இருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் இன்பவளவன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார்.

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார் இதுகுறித்து விசாரித்ததில் மகேந்திரன்தான் இன்பவளவனை கொலை செய்தார் என்று கண்டுபிடித்து அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement