டேய்.. அது பாம்புடா..! அசால்டாக பாம்பை பிடித்த இளைஞர்.. யாரு சாமி நீ..? வைரல் வீடியோ காட்சி..



Man handle snake viral video

இளைஞர் ஒருவர் பாம்பு ஒன்றை மிகவும் சாதாரணமாக பிடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயமும்தான். இந்நிலையில் கடைக்குள் புகுந்த பாம்பு ஒன்றை ஏதோ விளையாட்டு பொருள் போல் பிடிக்கும் இளைஞரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பலசரக்குக் கடை ஒன்றுக்குள் பாம்பு புகுந்த நிலையில், அந்த பாம்பை பிடிப்பதற்காக இளைஞர் ஒருவர் அங்கு வருகிறார். பின்னர் கடைக்குள் குழந்தை அவர், கடை செல்பில் இருக்கும் சில பொருள்களை நகர்த்தி வைத்துவிட்டு மிக மிக அசால்டாக பாம்பை தன் கையால் பிடிக்கிறார்.

எந்த ஒரு பயமும் இன்றி, ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டே இன்னொரு கையால் பாம்பை பிடிக்கிறார். மேலும் வெகு அசால்டாக அதை ஒரு பைக்குள் போட்டுக் கொண்டு செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.