தமிழகம் இந்தியா

குடிபோதையில் நண்பர்களை வீட்டிற்கு அழைத்துச்செல்லும் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு இது!

Summary:

Man had relationship with friend wife

திருவாரூர் மாவட்டம், திருத்துரைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் ஆற்றங்கரை தெருவில் வசித்து வருகிறார், ஜான் (வயது 30).  திருத்துறை பூண்டியில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வந்த ஜானுக்கு ஆரோக்கியமேரி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.


இந்நிலையில் ஜான் உடன் தமிழரசன் என்ற வாலிபரும் வேலைபார்த்து வந்துள்ளார். அன்று இரவு இருவரும் நன்கு மது அருந்திவிட்டு ஜான் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஜான் அதிக போதையில் இருப்பதை உணர்ந்த தமிழரசன் அவரது மனைவி ஆரோக்கியமேரியுடன் உல்லாசமகா இருந்துள்ளார்.

நள்ளிரவில், ஏதோ சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தார், ஜான். பக்கத்தில் நண்பன் தமிழரசனைக் காணவில்லை. எழுந்து சென்று அடுத்த அறைக்குச் சென்று பார்த்தவர், கடும் அதிர்ச்சி அடைந்தார். அங்கே, தமிழரசன் தன் மனைவி ஆரோக்கிய மேரியுடன் உல்லாசமாக இருப்பதைக் கண்டதும், ஜானுக்கு கோபம் தலைக்கேறியது. இரண்டு பேரையும், ஆக்ரோசத்துடன் சராமரியாகத் தாக்கியுள்ளார்.

தமிழரசன் அடி வாங்கிக் கொண்டு, தப்பிச் சென்று விட்டார். பின், ஜான் தன் மனைவியை, மீண்டும் தாக்கினார். இதனால், அவரது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


அவரை, அழைத்துக் கொண்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆரோக்கிய மேரி, படுகாயம் அடைந்ததால், அவரை, தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு, டாக்டர் கூறினார்.

ஆனால், கோபம் தணியாத, ஜான், தன் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து, துப்பட்டாவால், மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்றார்.

அவரைப் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்து, விசாரணை செய்து வருகின்றனர்.


Advertisement