தமிழகம்

மெய்மறந்து காதலியுடன் பேசிய இளைஞன்! 10 மணி நேரமாக கிணற்றுக்குள் தத்தளித்த பரிதாபம்! இரவில் என்ன நடந்தது?

Summary:

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இரவில் தனது காதலியுடன் போனில் பேசிக் கொண்டிருந்த இளைஞ

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இரவில் தனது காதலியுடன் போனில் பேசிக் கொண்டிருந்த இளைஞர் கிணற்றுக்குள் விழுந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக தத்தளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆஷிக் என்ற இளைஞனும் அங்கு தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அவர் நாள்தோறும் அவரது காதலியுடன் இரவில் செல்போனில் பேசுவது வழக்கமாம்.

அவ்வாறு நேற்று இரவு அவர் நூற்பாலை அருகே கிணற்றுப் பகுதியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது, தெரியாமல் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் அவர் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். ஆனால் இரவு நேரம் என்பதால் யாருக்கும் அவரை பற்றி தெரியவில்லை. சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக ஆஷிக் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்துள்ளார்.

பின்னர் காலை அவரது கூச்சல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் கிணற்றுக்குள் பார்த்துள்ளனர். அங்கு ஆஷிக் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் கயிறு கட்டி அவரை கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர். இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement