அந்த ஒரு நொடி எப்படி இருந்திருக்கும்!! இளைஞரின் தலைமேல் ஏறி இறங்கிய பேருந்து!! ஆனாலும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம்!!

அந்த ஒரு நொடி எப்படி இருந்திருக்கும்!! இளைஞரின் தலைமேல் ஏறி இறங்கிய பேருந்து!! ஆனாலும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம்!!


man-escaped-from-bus-accident-due-to-quality-helmet

தலை மீது பேருந்து ஏறிய நிலையிலும் இளைஞர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் ஓட்டக்கோவிலூர் என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் சத்தியசீலன் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் அரியலூர் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவர் சுண்டக்குடி செல்லியம்மன் கோவில் வளைவில் திரும்பியபோது எதிரே மினி பேருந்து ஒன்று வந்துள்ளது.

இதனால் பேருந்தில் மோதாமல் இருக்க சத்தியசீலன் தனது இருசக்கர வாகனத்தை திடீரென பிரேக் பிடித்து நிறுத்த முயன்றுள்ளார். இதில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சாய்ந்துள்ளது. இதனிடையே பேருந்தும் அருகில் வர, சத்தியசீலன் தனது இருசக்கர வாகனத்துடன் சேர்ந்து பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கியுள்ளார்.

இதில் பேருந்து சத்யசீலனின் தலையில் ஏறியுள்ளது. ஆனால் சத்தியசீலன் மிக தரமான தலைக்கவசம் அணிந்திருந்ததால் பேருந்து சக்கரத்தால் தலைக்கவசத்தை உடைக்க முடியவில்லை. இதனால் லேசான காயங்களுடன் சத்தியசீலன் பெரிய விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

Video credits: Polimernews Youtube