இப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. லாரியில் இருந்து பறந்த கயிறு.. நடந்துசென்ற அன்புச்செல்வன் முகம்சிதைந்து பலி..

இப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. லாரியில் இருந்து பறந்த கயிறு.. நடந்துசென்ற அன்புச்செல்வன் முகம்சிதைந்து பலி..



Man died in accident near Chitambaram

லாரியின் மேல்புறத்தில் இருந்து கயிறு கீழேவிழுந்து சாலையில் நடந்துசென்றவரை கட்டி இழுத்துச்சென்ற சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலை வழியாக சரக்கு லாரி ஒன்று அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்துள்ளது. குறிப்பிட்ட லாரி புது பூலாமேடு என்னும் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது லாரியின் மேற்புறத்தில் இருந்த கேப் ரூஃப் என்பதும் கயிறு காற்றில் பறந்துவந்து சாலையில் சென்றுகொண்டிருந்த அன்புச்செல்வன் என்பவர் மீது சிக்கி அவரை லாரியின் வேகத்திற்கு இழுத்துச்சென்றுள்ளது.

கயிறில் முனையில் நபர் ஒருவர் சிக்கி இழுத்துச்செல்லப்படுவதை பார்த்த அந்த வழியாக வந்துகொண்டிருந்த வாகன ஓட்டி ஒருவர் லாரியை முந்திச்சென்று நிறுத்தி, லாரி ஓட்டுனரிடம் விவரத்தை கூறியுள்ளார். உடனே லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இதனை அடுத்து விபத்தில் சிக்கியவரை அருகில் இறந்தவர்கள் மீட்டபோது அவர் முகம் சிதைந்து கொடூரமான முறையில் உயிரிழந்தது தெரியவந்தது. உடனே இந்த விபத்து குறித்து அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சரக்குகளை கட்டுவதற்காக லாரியில் வைக்கப்பட்டிருந்த கயிற்றை சரிவர சுருட்டி வைக்காமல், அலட்சியமாக வைத்திருந்திருக்கலாம் என்றும், லாரி சென்ற வேகத்தில் அந்த கயிறு காற்றில் பறந்து சாலையில் நடந்து சென்றவர் மீது விழுந்து அவரை இழுத்து சென்றிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் தலைமறைவான லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.