ஒரேமாத்தில் 3 பேரை காவுவாங்கிய மேம்பாலம்... 40 அடி உயரத்திலிருந்து தூக்கிவீசப்பட்டு ஒருவர் பலி..!

ஒரேமாத்தில் 3 பேரை காவுவாங்கிய மேம்பாலம்... 40 அடி உயரத்திலிருந்து தூக்கிவீசப்பட்டு ஒருவர் பலி..!


man-dead-by-falling-from-bridge

மேம்பாலத்தில் 40 அடி உயரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள ஒப்பணக்கார வீதி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 51). இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், வழக்கம் போல பணிக்கு ஒண்டிப்புதூர் நோக்கி திருச்சி மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சுங்கம் பகுதியின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி ஆனந்தகுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டுள்ளார்.

Coimbatore

இந்த விபத்தில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆனந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த மாதம் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், பாலம் திறந்த அடுத்தநாளே ஒருவர் உயிரிழ்ந்துள்ளார். தற்போது மீண்டும் ஒருவர் உயிரிழந்ததால் மக்கள் பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவர்களை சற்று உயரமாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.