தமிழகம்

இளம் பெண்ணுடன் உல்லாசம்.. திருமணம் முடிந்து 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து காதல்.. துடிதுடித்து உயிரிழந்த பெண்..

Summary:

தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இளம் பெண் ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் உறவு வைத்துக

தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இளம் பெண் ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் உறவு வைத்துக்கொண்டதால், அந்த இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள பேச்சக்கம்பட்டியை சேர்ந்தவர் கட்டட தொழிலாளியான அருண்பாண்டியன். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அருண்பாண்டியன் மில் ஒன்றில் வேலைபார்த்துவந்தபோது, அங்கு மாலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமியின் மகள் ஆனந்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

அருண்பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்த விஷயம் தெரியாத ஆனந்தி அருண்பாண்டியன் உடன் நெருங்கி பழகியுள்ளார். இதனை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட அருண்பாண்டியன், வரும் காதலர் தினத்தன்று திருமணம் செய்துகொள்வதாக கூறி, ஆனந்தியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனை அடுத்து அருண்பாண்டியனுக்கு திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகள் உள்ள விஷயம் தோழிகள் மூலம் ஆனந்திக்கு தெரியவந்துள்ளது. இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக வீட்டில் யாரிடமும் கூறாமல் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் காதலர் தினத்திற்கு முதல் நாள் வீட்டில் யாரும் இல்லாதபோது, தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார் ஆனந்தி. இதனை அடுத்து ஆனந்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆனந்தியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றதை அடுத்து ஆனந்தியை ஏமாற்றிய அருண்பாண்டியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அருண்பாண்டியன் மீது கூடுதலாக போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர். திருமணம் ஆனதை மறைத்து, காதல் என்ற பெயரில் இளம் பெண்ணை ஏமாற்றி, அவரை தற்கொலை வரை கொண்டுசென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement