ட்ரூ காலர் மூலம் நம்பர் எடுத்து 50க்கு மேற்பட்ட இளம் பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த வாலிபர்..! சிக்கியது எப்படி..?

ட்ரூ காலர் மூலம் நம்பர் எடுத்து 50க்கு மேற்பட்ட இளம் பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்த வாலிபர்..! சிக்கியது எப்படி..?


Man cheated 50 girls using true caller app

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக அவரது வாட்சப் எண்ணுக்கு முகம் தெரியாத யாரோ ஒருவரிடம் இருந்து தொடர்ச்சியாக மெசேஜ் வந்துள்ளது. தனக்கு மெசேஜ் அனுப்புவது யாரென்று தெரியாத அந்த பெண் அந்த எண்ணுக்கு கால் செய்து தனக்கு மெசேஜ் அனுப்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

இதனை அடுத்து அந்த பெண்ணின் எனக்கு ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வரிசையாக வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அநத இளம் பெண் இது குறித்து திருப்பத்தூர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரை அடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், அந்த பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியது நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் முல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த 24 வயதான வினோத் என்பதும், அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மும்மூர்த்தி நகரில் இருப்பதும் தெரியவந்தது.

Crime

இதனை அடுத்து வினோத்தை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. ட்ரு காலர் செயலியை பயன்படுத்தி ஏதாவது ஒரு பத்து இழக்க எண்ணை பதிவு செய்து அதில் பெண்களின் பெயர் வந்தால் அந்த எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி, போன் செய்து அந்த பெண்களை மயக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் வினோத்.

வினோத்தின் பேச்சில் மயங்கும் இளம் பெண்கள் தங்களின் ஆபாச புகைப்படங்கள், அந்தரங்க வீடியோக்களை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோக்களை வைத்து மிரட்டி அந்த இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்துவந்துள்ளார் வினோத்.

அவரது தொலைபேசியில் வேறு மாநில பெண்கள் உட்பட சுமார் 50 பெண்களின் அந்தரங்க வீடியோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வினோத்தை சிறையில் அடைத்துள்ளனர்.