தமிழகம்

இது கலிகாலம்.! போதையில் சண்டைப்போட்டுகொண்ட இளைஞர்கள்.! எதுக்குப்பா இப்படி செய்றீங்க எனக்கேட்ட நபருக்கு கத்திகுத்து.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று மாலை இளைஞர்கள் போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டவரை ரஹ்மான் என்ற இளைஞன் கத்தியால் தாக்கியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று மாலை ஒரு கடையில் இளைஞர்கள் மதுபோதையில் தகராறு செய்துகொண்டு இருந்துள்ளனர். அப்போது கரும்பிரான்கோட்டையை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவர் அந்த கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு சண்டை போட்டுகொண்டிருந்த இளைஞர்களிடம், எதற்கு இப்படி செய்கிறீர்கள் என ஏதார்த்தமாக கேட்டுள்ளார். அடுத்த நொடியே ரஹ்மான் என்ற இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெற்றிச்செல்வனை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து பலத்த காயமடைந்த வெற்றிச்சல்வன் ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர். இதனைப்பார்த்த பொதுமக்கள் ரஹ்மான் என்ற நபரை தாக்கியுள்ளனர். 

ரஹ்மான் என்ற இளைஞர் மீது கொலை, கொலைமுயற்ச்சி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் ஆலங்குடியில் பிளக்ஸ் தொழில் செய்து வந்த முருகானந்தம் மற்றும் அவரது தந்தையை சரமாரியாக தாக்கி சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் ரஹ்மனை கைது செய்யவேண்டும் என பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஆலங்குடியில் நேற்று பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement