தமிழகம்

மாந்த்ரீக சாமியார்!! போதைக்கு அடிமையான பெண்.. சிகிச்சை என்ற பெயரில் நடந்த கொடூரம்!! கைது செய்த போலீசார்..

Summary:

போதைக்கு அடிமையான பெண்ணை கொடூரமாக தாக்கிய சாமியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைக்கு அடிமையான பெண்ணை கொடூரமாக தாக்கிய சாமியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் மஞ்சநாயக்கனூரைச் சேர்ந்த பெண் ஒருவர் போதை பொருட்களுக்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால் அவரை குணப்படுத்தும் முயற்சியாக அவரது குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள சாமியார் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளனர். மாந்திரீகம் மூலம் அந்த பெண்ணை குணப்படுத்துவதாக அந்த சாமியாரும் அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அந்த பெண்ணை மாந்திரிகத்தால் குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் மதுபோதையில் அந்த சாமியார் அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார்‍. இந்த காட்சிகள் அனகிருந்த சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து பெண்ணை அடித்து கொடுமைப்படுத்திய சாமியாரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். வேலக்கவுண்டம்பட்டி காவல்நிலையத்தில் தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Advertisement