இந்தியா

தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பாலியல் வன்கொடுமை! அதிர்ச்சி சம்பவம்! போலீசார் அதிரடி!

Summary:

man arrested for molesting two women in institutional quarantine facility


பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் ஒருவரை கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்துள்ளனர்.
 
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூரில் சுப்ரமண்ய நகரில் வசிக்கும் ஜெய்சங்கர் என்பவர் கடந்த மார்ச் மாதம் அவரது உறவினரைச் சந்திக்க மும்பைக்குச் சென்றிருந்தார். இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் மும்பையிலிருந்து திரும்பி வந்துள்ளார். H.S.R பிரிவு அரசு விடுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து தனிமைப்படுத்தப்பட்ட மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஜெய்சங்கர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பொதுவான குளியலறைக்கு அருகில் 30 வயது இளம்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் 22 வயது பெண்ணை அவரது அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் ஜெய்சங்கரின் மாதிரிகள் கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கை வெளிவரும் வரை, அவர் பெங்களூரு H.S.R லேஅவுட் காவல் நிலையத்திற்குள் ஒரு அறையில் தனிமைப்படுத்தப்படுவார் எனத் தெரிவித்துள்ளனர். 


Advertisement