கதவைத் தட்டி போதை ஆசாமி செய்த காரியம்.! அலறிய பெண்.! அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்!!man-arrested-for-calling-girl-as-think-like-prostitude

கரூர் மாநகரம் வேம்பு மாரியம்மன் கோயில் அருகில், நல்லதங்கால் ஓடைத் தெரு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம்போல் பெண்கள் வீட்டில் இருந்துள்ளனர். அப்பொழுது கடுமையான போதையில்  வாலிபர் ஒருவர் அங்கிருந்த  வீட்டின் கதவை தட்டியுள்ளார்.

கதவைத் திறந்த பெண்ணிடம், தான் ஆயிரம் ரூபாய் தருவதாகவும், வழக்கமாக நான் வந்து செல்லும் பாலியல் தொழிலாளியின் வீடுதானே இது என்றும் கேட்டுள்ளார். இந்நிலையில் ஷாக்கான அந்த பெண் உடனே கத்தி அலறியுள்ளார். அதனை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து மின்கம்பம் ஒன்றில் கட்டி வைத்து கடுமையாக அடித்துள்ளனர். 

drink

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வாலிபரை மீட்டு அழைத்துச் சென்றனர். பின்னர் விசாரணையில் அந்த வாலிபர் நாமக்கல் மாவட்டம் வரவனை பகுதியை சேர்ந்த 35 வயது நிறைந்த சதீஷ்குமார் என தெரியவந்துள்ளது. இன்னும் திருமணமாகாத இவருக்கு கரூர் வரும்போது பாலியல் தொழிலாளி ஒருவரது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை தொடர்பு கொண்டபோது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு வர கூறியதாகவும், சதீஷ்குமார் தவறுதலாக வீடு மாறி சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.