கூட்டாளியை துப்பாக்கியால் சுட்டு, உடலை துண்டாக்கி தாமிரபரணியில் வீசிய ரௌடி வரிச்சியூர் செல்வம்..!Madurai Rowdy Selvam Killed Assistant 

மதுரையை சேர்ந்த ரௌடி வரிச்சியூர் செல்வம், தன்னை செல்வந்தர் மற்றும் அப்பாவி போல காண்பித்துக்கொள்ள நடமாடும் நகைக்கடையாக உள்ளூரில் வலம்வந்து நான் ரௌடி இல்லை, அப்பாவி என தெரிவித்து வந்தார். இவரிடம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) கூட்டாளியாக இருந்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக செல்வம் - செந்தில் குமார் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செந்தில் செல்வத்தை பிரிந்து சென்றார். கருப்பாயூரணி ஊராட்சி தலைவர் கொலை விவகாரத்தில் செந்தில் குமார் காவல் துறையினரால் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். 

tamilnadu

இவ்வழக்கில் செந்தில் குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதால், அவரை கண்டறிய நீதிமன்றம் உத்தரைவட்டத்தை தொடர்ந்து அதிகாரிகள் தனிப்படை அமைத்து செந்தில்குமாரை தேடி வந்தனர். செல்போன் அழைப்புகளை வைத்து ஆய்வு செய்கையில், செந்தில்குமார் இறுதி வரை செல்வத்திடம் பேசி வந்தது உறுதியானது. 

இதனையடுத்து, வரிச்சியூர் செல்வத்திடம் அதிஅக்ரிகல் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது. தனது கூட்டாளி செந்தில் குமாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து, உடலை துண்டாக்கி தாமிரபரணி ஆற்றில் வீசியது உறுதியானது. விசாரணைக்கு பின்னர் வரிச்சியூர் செல்வத்தை அதிகாரிகள் கைது செய்தனர்.