மின்வாரிய அலுவலகத்தில் அதிர்ச்சி... பெண் ஊழியரை ஆபாசமாக படமெடுத்த ஆய்வாளர்.!!
மதுரை மின்வாரிய அலுவலகத்தில் கழிவறைக்குச் சென்ற பெண் ஊழியரை ஆபாசமாக வீடியோ பதிவு செய்த மின்வாரிய ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள நபரின் செல்போனிலிருந்து பல பெண்களின் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுரை மின்வாரிய அலுவலகத்தில் ராஜராஜன்(33) என்பவர் வணிக ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது ஜன்னல் அருகே மறைந்திருந்த ராஜராஜன் அந்த பெண்ணை தனது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர், இது தொடர்பாக காவல்துறையிடம் புகாரளித்தார்.

இதனைத் தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்திற்கு வருகை புரிந்த காவல்துறையினர், பெண் ஊழியரை ஆபாசமாக படம் பிடித்த ஆய்வாளர் ராஜராஜனை கைது செய்து அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இதன் பிறகு அவரது செல்போனை காவல்துறை ஆய்வு செய்ததில் பல பெண் ஊழியர்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: மச்சினியை வீடியோ எடுத்த மச்சான்... செல்போன் முழுவதும் குளியல் வீடியோக்கள்.!! விசாரணையில் அதிர்ச்சி.!!
மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை தொடர்ச்சியாக ஆபாச படமெடுத்து செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அரசு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது..
இதையும் படிங்க: அட கொடுமையே... பெண் பக்தரை ஆபாச படமெடுத்த விவகாரம்.!! ராமர் கோவில் ஊழியர் கைது.!!