3 நாட்களில் உச்சத்தை எட்டிய மதுபான விற்பனை!.. முதலிடத்தில் நீடிக்கும் மதுரை!. எவ்வளவுன்னு தெரிஞ்சா வாயடைச்சு போயிடுவீங்க..!

3 நாட்களில் உச்சத்தை எட்டிய மதுபான விற்பனை!.. முதலிடத்தில் நீடிக்கும் மதுரை!. எவ்வளவுன்னு தெரிஞ்சா வாயடைச்சு போயிடுவீங்க..!



Madurai continues to be the top liquor sales peak in 3 days

தீபாவளி பண்டிகை, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டுகள் மற்றும் பொங்கல் திருநாள் போன்ற பண்டிகை காலங்களின்போது டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின்  விற்பனை அதிகரிக்கும். பண்டிகை காலங்கள் என்றால் மது பிரியர்களின் முதல் தேர்வு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது. மேலும் தினசரி மது அருந்துவதை பழக்கமாக கொள்ளாதவர்கள் கூட பண்டிகை காலங்களில் கொண்டாட்டங்களுக்காக மது அருந்துவது தற்போது அதிகரித்து வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி 'டாஸ்மாக்' கடைகளில் விற்பனையாகும் மதுபானங்களின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டுகளை விட அதிகரிப்பது வழக்கம் வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி தினமான நேற்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் ரூ.244.08 கோடிக்கு மது விற்பனை விற்பனையாகியள்ளது.

விடுமுறை தினமான கடந்த சனிக்கிழமை தொடங்கி கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.708.29 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.154 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.140 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.142 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.139 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.133 கோடிக்கும் மதுபனங்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.