கடன் தொல்லையால் கொடூரம்.. மனைவி, 2 குழந்தைகளை கொன்று விவசாயி தற்கொலை முயற்சி.. மதுரையில் பரிதாபம்.!

கடன் தொல்லையால் கொடூரம்.. மனைவி, 2 குழந்தைகளை கொன்று விவசாயி தற்கொலை முயற்சி.. மதுரையில் பரிதாபம்.!


madurai-alanganallur-farmer-killed-3-persons-suicide-at

கழுத்தை நெரித்த கடன் தொல்லையால் விவசாயி தனது மனைவி, 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தனக்கு நீச்சல் தெரியும் என்ற காரணத்தால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சோகம் நடந்துள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பெரிய இலந்தைகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன் (வயது 38). அங்குள்ள ஊமச்சிகுளம் தவசிபுதூரில் கொய்யாத்தோப்பை முருகன் குத்தகைக்கு எடுத்துள்ளார். இவர் தனது மனைவி சுரேகா (வயது 35), மகள் யோகிதா (வயது 16), மகன் மோகனன் (வயது 11) ஆகியோருடன் தோப்பிலேயே தங்கியிருந்து வந்துள்ளார்.

மதுரையில் செயல்பட்டு வரும் மகளிர் பள்ளியில் லோகிதா 11 ஆம் வகுப்பும், மோகனன் பாலமேட்டில் இருக்கும் தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். முருகன் தோட்ட பராமரிப்புகளுக்கு, குடும்ப செலவுக்கு என பலரிடமும் கடன் வாங்கியுள்ளார். இதனை திருப்பி செலுத்த இயலாமல் முருகன் அவதிப்படவே, குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் விபரீத எண்ணம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, முருகன் தனது உறவினருக்கு தொடர்பு கொண்டு கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்யப்போவதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். பதறிபோனவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குடும்பத்தினரை தேடியுள்ளனர். 

madurai

மனைவி மற்றும் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த முருகன், தனக்கு நீச்சல் தெரியும் காரணத்தால் தப்பித்துவிடுவோம் என்று எண்ணி கிணறு படியில் அமர்ந்து கழுத்தை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

முருகனை மீட்ட அதிகாரிகள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மேலும், அலங்காநல்லூர் தீயணைப்பு படையினர் கிணற்றுக்குள் மூழ்கி உயிரிழந்த சுரேகா மற்றும் 2 குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக அலங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.