தூக்கில் ஊசலாடிய உயிர்.. தாயின் கதறல்., காவல்துறை தெய்வங்களால் காப்பாற்றப்பட்ட இளைஞர்.!

தூக்கில் ஊசலாடிய உயிர்.. தாயின் கதறல்., காவல்துறை தெய்வங்களால் காப்பாற்றப்பட்ட இளைஞர்.!



Madhavaram Police Save Life Suicide Attempt Chennai City Police Commissioner Congrats Officers

தாயிடம் சரக்கடிக்க பணம் கேட்டு கிடைக்காததால், தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த இளைஞரின் உயிர் காவலர்களால் காப்பாற்றப்பட்டது.

சென்னையில் உள்ள மாதவரம் பொன்னியம்மன் மேடு தெரு, 1 ஆவது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் நாகலட்சுமி. இவரின் மகன் சுகுமார். சுகுமாருக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால், சரிவர வேலைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே மதுபானம் அருந்தி போதையில் மிதந்து வந்துள்ளார். 

அவ்வப்போது, தாயாரிடம் தகராறு செய்தும், மிரட்டியும் பணம் வாங்கி சென்று மதுபானம் அருந்தும் பழக்கத்தையும் சுகுமார் கையில் எடுத்துள்ளார். சம்பவத்தன்று, மதுபானம் அருந்த தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்ய, அவர் பணம் தர மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த சுகுமார் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறி வீட்டின் கதவை தாளிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார். 

அங்கு அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவே, அதிர்ச்சியடைந்த நாகலட்சுமி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மாதவரம் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படவே, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தலைமைக்காவலர் மணிமாறன் மற்றும் ஆயுதப்படை காவலர் உதயராஜ் ஆகியோர் நாகலெட்சுமியின் வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர்.

chennai

வீட்டின் கதவை பூட்டி சுகுமார் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், விரைந்து செயல்பட்டு கதவை உடைத்து வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள், மின்விசிறியில் புடவையால் தூக்கில் தொங்கி உயிருக்கு போராடிய சுகுமாரை மீட்டனர். அங்கேயே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

சிறப்புடன் செவ்வனே பணியாற்றி உயிரை காப்பாற்றிய தலைமைக்காவலர் மணிமாறன் மற்றும் ஆயுதப்படை காவலர் உதயராஜ் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டிய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அதிகாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.