அண்ணன் தங்கை உறவு இடையே மலர்ந்த காதல்... முட்டுக்கட்டை போட்ட பெற்றோர்.. பரிதாபமாக உயிரிழந்த சோகம்..Lovers commit suicide near Thindivanam

இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டநிலையில், சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அடுத்த எறையானூர் கிராமத்தை சேர்ந்த மகாதேவன் என்பவரின் மகன் ராமஜெயம் என்ற அருணாச்சலம் (18). இவரும் அதே பகுதியை சேர்ந்த பாவாடைராயன் என்பவரின் 16 வயது மகள் அபிநயா என்பவரும் கடந்த ஒரு ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் எப்படியோ குடும்பத்தினருக்கு தெரியவர, அபிநயா - அருணாச்சலம் இருவரும் அண்ணன் - தங்கை உறவு என்பதால் அவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளனர்.

பெற்றோர் மற்றும் உறவினர்கள் இவர்களை எங்கு தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் திண்டிவனம் அடுத்துள்ள கருணாவூர் வயல்வெளி பகுதியிலுள்ள புளியமரத்தில் காதல் ஜோடி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே உயிரிழந்த அருணாச்சலத்தின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் அவரை யாரோ அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளதாக அருணாசலத்தின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சந்தேகப்படும் நபர்கள் மீது புகார் கொடுத்தால் நடவாடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து, உயிரிழந்த அருணாசலத்தின் தாய் அந்த பகுதியை சேர்ந்த 10 பேர் மீது புகார் கொடுத்தார். இதனை அடுத்து இன்று மாலை வரை அந்த 10 பேர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அருணாசலத்தின் உறவினர்கள் 100 கும் அதிகமானோர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சம்பவ இதற்கு வந்த போலீசார், புகார் கொடுத்துவார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு நிலவியது.