தமிழகம்

தனியாக வந்த குழந்தையின் கை.! யூ ட்யூப் பார்த்து காதலிக்கு காட்டுக்குள் வைத்து பிரசவம் பார்த்த காதலன்..!

Summary:

Lover attempt to get delivery by watching YouTube video

காதலித்த பெண் கர்ப்பமான நிலையில், 8 வது மாதத்திலையே காட்டு பகுதியில் வைத்து காதலன் காதலிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சௌந்தர். இவருக்கும், அதேபகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் காதலாக மாற, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதன் விளைவாக மாணவி கற்பமாகியுள்ளார். 8 மாதம் வரை தனது கற்பதை அனைவரிடம் இருந்து மறைத்துவந்த அந்த மாணவி இதுக்கு மேல் மறைக்க முடியாது என காதலனிடம் கூறியுள்ளார். இதனால் 8  மாத கர்ப்பிணியான அந்த இளம்பெண்ணுக்கு காதலனே பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளார்.

8 மாதத்தில் பிரசவம் பார்ப்பது எப்படி என யூ ட்யூபை பார்த்து காட்டுப்பகுதியில் வைத்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க முயற்சித்துள்ளார். இந்த விபரீத முற்சியில், குழந்தையின் கை தனியாக வெளியே வர, பதறிப்போன சௌந்தர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவியை பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மாணவியை சோதித்த மருத்துவர்கள், குழந்தை வயிற்றில் இறந்துவிட்டதாக கூறி, மேல் சிகிச்சைக்காக இராயபுரம் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்துக்கும் காரணமான சௌந்தரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement