"அண்ணி வலையில் காதல் கணவன்..." மனைவியின் கண் முன்னே உல்லாசம்.!! உயிரை விட்ட இளம் பெண்.!!
திருப்புத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, சின்னா கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள் பாண்டியன். இவரது மனைவி அம்மு. இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும் உள்ளனர். முதல் மகன் எட்டாம் வகுப்பும், இரண்டாவது மகன் ஏழாவது வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கணவன் அருள் பாண்டியன், மனைவி இருக்கும் போதே தனது அண்ணன் மனைவியுடன் தகாத உறவில் இருந்துள்ளார். நாளடைவில் மனைவி அம்முவிற்கு இது தெரிந்ததால் இவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதான் மனைவிக்கு தெரிந்து விட்டதே? இனி என்ன என்று கருதிய அருள் பாண்டியன் 2 பிள்ளைகளுக்கு தாயான அண்ணியை மனைவி இருக்கும் பொழுதே தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அம்மு தோட்டத்திலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்த அம்முவை பக்கத்து வீட்டார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டார் என கூறியுள்ளனர். இத்தனைக்கும் காரணமான அருள் பாண்டியன் ஒன்றும் தெரியாத குழந்தையைப் போல அழுது நாடகம் நடித்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த உறவினர்கள் அவனை சராமாரியாக தாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: போதையால் சீரழிந்த குடும்பம்... கணவனை போட்டுதள்ளிய மனைவி.!!! போலீஸ் விசாரணை.!!
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருள் பாண்டியனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அம்முவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் செய்த மனைவியை கள்ள உறவினால் மனம் நோக செய்து தற்கொலைக்கு தூண்டிய இந்த கணவனின் செயலால் ஒன்றும் அறியா 2 பிள்ளைகளின் வாழ்க்கை விடை தெரியாமல் நிற்கிறது.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!