தமிழகம்

அக்காவை காதலிப்பதாக கூறி தங்கையை காதலித்த இளைஞர்! கடைசியில் தங்கையால் அக்காவுக்கு நிகழ்ந்த சோகம்..!

Summary:

Love problem sisters murder

நாமக்கல் மாவட்டம்  கொசவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் கல்லூரி படிப்பையும், இளைய மகள் 12 ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் மூத்த மகள் மோனிஷாவை அதே பகுதியை சேர்ந்த ராகுல் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார்.

மோனிஷா மற்றும் ராகுல் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளனர். கல்லூரிக்கு ஒரே பேருந்திலும் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் ராகுல் தனது காதலை மோனிஷாவிடம் கூறியுள்ளார். ஆனால் மோனிஷா ராகுலின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரின் காதலை ஏற்று கொள்ளவில்லை.

அதனை அடுத்து மோனிஷாவின் தங்கையிடம் உதவி கேட்டுள்ளார். தங்கையும் அக்காவிடம் இதை பற்றி கூறியுள்ளார். ஆனால் மோனிஷா எதற்கு அசையாமல் ராகுலின் காதலை மறுத்து வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக ராகுல் மோனிஷாவின் தங்கையை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.

இருவரும் காதலிப்பது மோனிஷாவிற்கு தெரியவரவே தங்கையை அக்கா கண்டித்துள்ளார். ஆனால் தங்கை அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் ஒரு நாள் திடீரென மோனிஷாவின் தங்கை அலறியுள்ளார். அவரின் அலறல் சத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது இருவரின் கையிலும் இரத்தம் வடிந்துள்ளது. அதனை அடுத்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் மோனிஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனை அடுத்து போலீசார் சம்பவம் குறித்து மோனிஷாவின் தங்கையிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தங்கையின் காதலுக்கு அக்கா இடையூறாக இருந்ததால் தங்கையே காதலுடன் சேர்ந்து கொண்டு அக்காவை கொலை செய்து விட்டு நாடகம் ஆடியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தங்கையிடம் கூறிவிட்டு மோனிஷா படுக்க சென்றுள்ளார். அப்போது தனது காதலனை வீட்டுக்கு வரவழைத்து அவருடன் சேர்ந்து அக்காவை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் இருவரின் கையும் அறுத்து கொண்டு அக்கா, தங்கை சண்டையால் தான் கையை அறுத்து கொண்டதாக எல்லாரையும் நம்ப வைத்து விடலாம் என்று நினைத்து இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார் மோனிஷாவின் தங்கை. இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement