தமிழகம்

எதிரெதிரே வந்த இரண்டு லாரிகள் மோதியதில் கோர விபத்து.. தீப்பற்றி எரிந்த பதறவைக்கும் சம்பவம்.!

Summary:

எதிரெதிரே வந்த இரண்டு லாரிகள் மோதியதில் கோர விபத்து.. தீப்பற்றி எரிந்த பதறவைக்கும் சம்பவம்.!

சரக்கு லாரி ஒன்று கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில், இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊதியூர் பகுதியில் முன்னால் சென்ற வாகனத்தை முந்துவதற்காக முயன்ற சரக்கு லாரி, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து இருசக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஈரோடு- பழனி நெடுஞ்சாலையில் சென்றுள்ளது.

அப்போது எதிர்திசையில் தேங்காய்நார் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி, அதற்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்தவதற்காக முயற்சித்தபோது, கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது.இந்த விபத்தில் டீசல் டேங்க் வெடித்து 2 லாரிகளிலும் தீப்பற்றிய நிலையில், கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார்.மேலும், தேங்காய் நார் ஏற்றி வந்த லாரி கிளீனர் கீழே குதித்து உயிர் தப்பிய நிலையில், ஓட்டுனரின் உடலில் தீப்பற்றியுள்ளது. பின் ஓட்டுநர் கொளுந்துவிட்டு எரிந்த தீயை போராடி அணைத்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் 50 சதவீத உடலில் தீப்பற்றி இருந்ததால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தின் காட்சிகள் மற்றொரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியதால், அதனை ஆதாரமாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement