புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
தமிழக சிறையில் இங்கிலாந்து கைதி திடீர் மரணம்.! புதிய வகை கொரோனா பாதிப்பா? அச்சத்தில் சக கைதிகள்.!
தர்மபுரி மாவட்டத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த வெளிநாட்டுக்காரர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர், லண்டனை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் டேவிட் வில்லியம்ஸ் என்பதும் தெரியவந்தது.
அந்த நபர் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக தமிழகத்தில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனால் அந்த நபரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், டேவிட் வில்லியம்ஸ் நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து சிறை ஊழியர்கள் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டேவிட் வில்லியம்ஸை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்னவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். உயிரிழந்தவர் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனை சேர்ந்தவர் என்பதால் அவர் புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தாரா என சக கைதிகளிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அவரை சிறையில் அடைக்கும் முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என சிறைத்துறை தெரிவித்தது. மேலும் அவர் பல மாதங்களாக தமிழ்நாட்டிலேயே தங்கி இருப்பதால் அவருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என சிறை நிர்வாகம் தெரிவித்தது. ஆனாலும் சக கைதிகளிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்குவதற்காக அவருடன் சிறையில் இருந்த அனைத்து கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்தது.