தமிழகம்

நடிகர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து இயக்குனர் லிங்குசாமி செய்த காரியம்! குவியும் வாழ்த்துக்கள்!!

Summary:

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாள

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டு மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களால் முடிந்த நிதியை அனுப்பிவைக்கலாம், யார் எவ்வளவு நிதி உதவி அளித்துள்ளார்கள் என்பதும், அதன் செலவு விவரங்களும் வெளிப்படையாக இருக்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.  இதனைத்தொடர்ந்து முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் நிவாரண நிதிகளை அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் சூர்யாவின் அஞ்சான், விஷாலின் சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் லிங்குசாமி உதயநிதி ஸ்டாலினை சந்தித்து முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு நன்றி கூறியுள்ளார்.


Advertisement