பூட்டிய விடுதி அறையில் நுரைதள்ளிய நிலையில் 2 மாணவிகள்.. அலறிப்போன ஊழியர்கள், நடந்த பரபரப்பு சம்பவம்.!

பூட்டிய விடுதி அறையில் நுரைதள்ளிய நிலையில் 2 மாணவிகள்.. அலறிப்போன ஊழியர்கள், நடந்த பரபரப்பு சம்பவம்.!


LAW COLLEGE GIRL STUDENTS SUICIDE ATTEMPT IN MADURAI

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டியில் வசித்து வருபவர் அண்ணாதுரை. இவரின் மகள் அபிநந்தினி (வயது 22). திண்டுக்கல்லில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவரின் மகள் ஐஸ்வர்யா லட்சுமி (வயது 22). அபிநந்தினி திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் இரண்டாம் வருடமும், ஐஸ்வர்யா லட்சுமி நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் இரண்டாம் வருடமும் படித்து வருகின்றனர். 

இருவரும் ஒரே மாவட்டத்தார்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டு தோழியாக இருந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் மதுரையை சுற்றிப்பார்க்க வந்த நிலையில், மாவட்ட அநீதிமன்றம் எதிரே உள்ள விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் இன்று காலை இருவர் தங்கியிருந்த அறையின் கதவுகள் திறக்கப்படவில்லை. 

இதனையடுத்து விடுதி ஊழியர்கள் சந்தேகமடைந்து ஜன்னல் வழியே எட்டி பார்க்க, இருவரும் வாயில் நுரைதள்ளிய நிலையில் இருந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக அண்ணாநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

கல்லூரி மாணவிகள் இருவரும் இணைபிரியாத தோழிகளாக இருந்து வந்த நிலையில், வெவ்வேறு ஊர்களில் உள்ள கல்லூரிகளில் படித்து வந்தாலும் அவ்வப்போது சந்திப்பது வழக்கம். இந்த சூழலில் தான் மதுரைக்கு வந்தவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இந்த சம்பவம தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.