நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்! அவருக்கு கிடைக்க போகும் பதவி! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம்

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்! அவருக்கு கிடைக்க போகும் பதவி!

 


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேற்று ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. 

சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தை மட்டுமில்லாமல் இந்தியாவையே உலுக்கிய சம்பவம் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரணம் அடைந்தது. இதனால்  குழந்தைகளை காப்பதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் விரும்பினார். இது குறித்து சில நாட்களுக்கு முன்பு தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசினார். 

இதனையடுத்து நேற்று முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து குழந்தைகளை காப்பதற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் குழந்தைகளை காப்பதற்கான அமைப்பின் தலைவராக லதா ரஜினிகாந்த் செயல்படுவார் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இரு தரப்பில் இருந்தும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
TamilSpark Logo