
land donate for school
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொளுத்தும் வெயிலிலும் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றன.
பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் பொள்ளாச்சி, ஆனைமலை தொகுதிகளில் உள்ள பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் பேசிய ஆர்.சரத்குமார், மத்தியிலும், மாநிலத்திலும் சிறந்த ஆட்சி நடக்கிறது. இந்த மெகா கூட்டணி அமைந்தவுடன் எதிர்கட்சிக்கு பயம் வந்து விட்டது என கூறினார். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மகேந்திரன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை கேந்திர வித்யாலயா பள்ளிக்காக கொடுத்தவர், தென்னை விவசாயிகளின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் எனவே அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வெற்றிபெற செய்யுங்கள் என கோரி வாக்கு சேகரித்தார்.
Advertisement
Advertisement