அரசியல் தமிழகம்

சசிகலா சொன்னது உண்மை தான்.! ஓப்பனாக பேசிய பாஜக தலைவர் எல்.முருகன்.!

Summary:

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்த பிறகு விடுதலையான சசிகலா, கடந்த 8

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்த பிறகு விடுதலையான சசிகலா, கடந்த 8-ம் தேதி பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பினார். அப்போது, அவருக்கு அமமுக தொண்டர்களும் சசிகலாவின் ஆதரவாளர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசுகையில், சசிகலாவின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெரிவித்த பிறகே, என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது குறித்து பேச முடியும். 

அனைவருக்கும் பொது எதிரி திமுக என்ற சசிகலா கூறியிருக்கிறார். இது உண்மைதான். ஆனால் சசிகலா அதிமுகவில் சேருவாரா என்பதெல்லாம் அவர்கள் உட்கட்சி பிரச்சினை. இது பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. அவருடைய தேர்தல் நிலைப்பாடு என்ன என்பதை சசிகலா அறிவித்த பிறகு தான் அதுகுறித்து கருத்து சொல்ல முடியும் என தெரிவித்தார்.


Advertisement