அட கடவுளே.. ஒருவேளை சாப்பிட்றக்கே கஷ்டப்பட்ட நடிகை குஷ்பு.. தழுதழுத்த குரலில் குஷ்பு கூறிய சோக வார்த்தைகள்..

அட கடவுளே.. ஒருவேளை சாப்பிட்றக்கே கஷ்டப்பட்ட நடிகை குஷ்பு.. தழுதழுத்த குரலில் குஷ்பு கூறிய சோக வார்த்தைகள்..


Kushboo talks about her past life

ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டதாக நடிகை குஷ்பு தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து பேசி கண்ணீர் சிந்தினார்.

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் நடிகை குஷ்பு பாஜக சாரிப்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக - அதிமுக கூட்டணியில் களம்காணும் நடிகை குஷ்பூ இந்த தேர்தலில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டுவருகிறார்.

kushboo

இந்நிலையில் நடிகை குஷ்பு, கூட்டணி கட்சிகளுடன் அந்த தொகுதியில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தழுதழுத்த குரலில் பேசிய அவர், தான் வெற்றி பெற வேண்டும் என தனது தாய் நாள்தோறும் இறைவனை பிரார்த்திப்பதாக கூறியதோடு, 35 ஆண்டுகளுக்கு முன் ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் தான் தமிழகம் வந்தபோது, தன்னை வாழவைத்தது இந்த தமிழகம்தான் என கூறினார்.

மேலும் தனக்கு பேரும் புகழும் கொடுத்த தமிழக மக்களை நம்பியே இந்த தேர்தலில் களம் காண்பதாக நடிகை குஷ்பு தெரிவித்தார்.