பிரச்சார யுக்தியே வேற லெவல்.!! தொகுதியில் அசர வைக்கும் குஷ்புவின் பிரச்சாரம்!! வியக்கும் மக்கள்..

பிரச்சார யுக்தியே வேற லெவல்.!! தொகுதியில் அசர வைக்கும் குஷ்புவின் பிரச்சாரம்!! வியக்கும் மக்கள்..



Kushboo different kind of approach in Thousand light constituency

ஆயிரம்விளக்கு தொகுதியில் மக்களை அசரவைத்துவருகிறது நடிகை குஸ்புவின் தேர்தல் பிரச்சாரம்.

தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடிப்பெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி சார்பாக ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஸ்பு தனது வித்தியாசமான தேர்தல் பிரச்சாரத்தால் தொகுதி மக்களை கவர்ந்து வருகிறார்.

Kushpu

பொதுவாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்க்கட்சிகளை குறை கூறுவது வழக்கம். ஆனால் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஸ்பு எதிர்க்கட்சி வேட்பாளரின் குறைகள் குறித்து பேசுவதை விட, உங்கள் சகோதரிக்கு வாய்ப்பு தாருங்கள், உங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகளை நான் தீர்த்து தருகிறேன் என்று மட்டும் கூறி வாய்ப்புக் கேட்டுவருகிறார்.

அதுமட்டும் இல்லாமல் மக்களோடு மக்களாக இணைந்து, தொகுதியில் உள்ள மக்களிடம் உரையாடுவது, வீட்டிற்கு சென்று டீ போட்டு கொடுப்பது, குழந்தைகளை தூக்கி கொஞ்சுவது, முதியோர்களை சந்தித்து பேசுவது என மக்களை கவர்ந்து வருகிறார் குஸ்பு.

Kushpu

மேலும், ஆயிரம் விளக்கு தொகுதிக்காகவே அவர் தனியாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்ற மாநில அரசிடம் போராடுவேன், முடியவில்லை என்றால் எனது சொந்த செலவில் அவற்றை நிறைவேற்றி கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.