BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ₹1000 யார் யாருக்கு கிடையாது... முழு விவரம் இதோ...
கடந்த மாதம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹ 1000 வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பபடிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டன. அதன்படி வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் தற்போது இத்திட்டத்திற்காக விண்ணப்பித்த 60 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் விவரம் ஆதார் மற்றும் பான் கார்டு சரிபார்ப்பின் மூலம் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் கார் பதிவு மற்றும் முதியோர் ஓய்வூதியம் போன்ற விவரங்கள் ஆதார் கார்டு மூலம் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்துவது ஆண்டுக்கு 3000 யூனிட் பயன்படுத்துவது மின் ரசீது மூலம் அறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.