மின்னல் தாக்கி பறிபோன உயிர்... 11 ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி.. கண்ணீர் சோகம்.!

மின்னல் தாக்கி பறிபோன உயிர்... 11 ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி.. கண்ணீர் சோகம்.!


krishnagiri-boy-dead-by-lightning

11ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் மின்னல் தாக்கி, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், தின்னூர் அருகாமையில் ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் முனியப்பா. இவரது மகன் சிவனேசன் (வயது 17). இவர் ஓசூரில் தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகாமையில் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில், சிவனேசன் நேற்று முன்தினம் டியூஷனுக்கு சென்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் மாணவன் மழையில் நனைந்து விடக்கூடாது என்பதற்காக, அருகில் உள்ள சனீஸ்வரர் கோயில் பக்கம் மரத்தடியில் நின்றுள்ளார்.

அப்போது, மரத்தில் நின்ற மாணவனின் மீது திடீரென மின்னல் தாக்கிய நிலையில், அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஓசூர் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

Krishnagiri

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், டியூசன் சென்ற 11ஆம் வகுப்பு மாணவன் மின்னல் தாக்கி, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.