தமிழகம்

50 வயது பெண்ணை திருமணம் செய்ததால் பயங்கரம்.. 32 வயது இளைஞரை கயிற்றால் கட்டி கண்டஇடத்தில் தாக்கிய கொடூரம்.!

Summary:

50 வயது பெண்ணை திருமணம் செய்ததால் பயங்கரம்.. 32 வயது இளைஞரை கயிற்றால் கட்டி கண்டஇடத்தில் தாக்கிய கொடூரம்.!

வயதை சுட்டிக்காட்டி பெண்ணின் உறவினர்கள் இளைஞரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானலில் 32 வயதுடைய பட்டதாரி இளைஞர் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அந்த விடுதியில் 50 வயதுடைய ஒரு பெண் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

தொடர்ந்து பெண்ணுக்கும் இளைஞருக்கும் தொடர்பு ஏற்பட்ட நிலையில், கணவரை இழந்து மகளை திருமணம் செய்து கொடுத்த பெண்ணை இளைஞர் காதலித்துள்ளார்.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இருவரும் திருமணம் செய்து ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து இருவரது உறவினர்களுக்கும் தெரியவந்த நிலையில், வயது வித்தியாசத்தை கூறிய எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.இந்த திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறியுள்ளனர். ஆனால், இதனை இளைஞர் ஏற்க மறுத்ததால், அவர் காலில் கயிற்றால் கட்டி மதுபோதையில் இருந்த பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர்.

இதனை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தெரியவர, அவர்கள் இளைஞரிடம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், அவரை மருத்துவமனையில் அனுமதித்து பெண்ணின் உறவினர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement