அரசியலில் களமிறங்கும் கிருத்திகா உதயநிதி?... அவரே தெரிவித்த அசத்தல் பதில்.!

அரசியலில் களமிறங்கும் கிருத்திகா உதயநிதி?... அவரே தெரிவித்த அசத்தல் பதில்.!


Kiruthiga Udhayanidhi Says I Could Not Enter Politics

அரசியலில் களமிறங்கும் எண்ணம் இல்லை என்று கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார். 

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், குதிரைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை திமுக இளைஞரணி செயலாளர், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினின் மனைவி இயக்குனர் கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்தார். 

குதிரையின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மருத்துவ முகாமானது நடைபெற்றது. குதிரைக்கு பாதுகாப்பு உபகரணம், மருத்துவ பொருட்கள் போன்றவையும் வழங்கப்பட்டது. 

chennai

இதன்போது, கிருத்திகா உதயநிதியிடம் அரசியலுக்கு வருவீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே, அதற்கு பதிலளித்த கிருத்திகா அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.