கவுன்சிலரின் காரை ஆட்டையை போட்டு அசால்ட் செய்த கில்லாடி மாணவர்..!

கவுன்சிலரின் காரை ஆட்டையை போட்டு அசால்ட் செய்த கில்லாடி மாணவர்..!


Killadi student who assaulted the councilor's car with a goat

திருப்பூர் மாவட்டம், திருப்பூரை அடுத்த காந்திநகரில் உள்ள ஈ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் ( 57). இவர் திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மேலும் ம.தி.மு.க கட்சியில் மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இவருடைய காரை காணவில்லை. மர்ம நபர் யாரோ காரை திருடி சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து கார் காணாமல் போனது குறித்து, வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். மேலும் நாகராஜ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கார் காணாமல் போன அன்று காலை வாலிபர் ஒருவர் காரை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து நாகராஜ் வீட்டின் அருகே வசிக்கும் முகமது ஷக்கி (19) என்ற வாலிபரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காரை திருடி சென்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து முகமது ஷக்கியை கைது செய்து அவரிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் மேலும், நாகராஜின் மகன் கார்த்திக் கடந்த 1 மாதத்திற்கு முன்பு கார் சாவியை தொலைத்ததும் மாற்று சாவியின் மூலமாக காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் தொலைந்த சாவி முகமது ஷக்கி கையில் கிடைத்துள்ளது. அந்த சாவியை கொண்டு காரை திருடி சாமுண்டிபுரம் பகுதியில் நிறுத்தியதும் அதனை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.