குளிக்கும்போது வீடியோ எடுத்தார்.. லாட்ஜ்களுக்கு கூட்டிட்டுபோய் விருந்தாக்கினார்! 17 வயது சிறுமியின் ஷாக் தகவல்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் இந்தியா

குளிக்கும்போது வீடியோ எடுத்தார்.. லாட்ஜ்களுக்கு கூட்டிட்டுபோய் விருந்தாக்கினார்! 17 வயது சிறுமியின் ஷாக் தகவல்!

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயதான இவர் ஒருநாள் வீட்டில் குளித்துக்கொண்டிருக்கையில் இவரது உறவுக்கார பெண் ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். தான் சொல்வதை கேட்கவேண்டும் என்றும் இல்லையெனில் வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிவிடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.

இதற்கு பயந்துபோன இளம் பெண் அந்த பெண் சொல்வதையெல்லாம் கேட்டுள்ளார். தனக்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளத்தக்க கூறிவிட்டு அந்த இளம் பெண் தினமும் காலையில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். ஒருநாள் வேளைக்கு சொல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.

தனது மகளை பெற்றோர் பல இடங்களில் தேட, இதனிடையே மறுநாள் காலையில் அந்த பெண்ணின் சொந்தக்கார பெண் ஒருவர், சிறுமியை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். நிஷா திருவனந்தபுரம் பகுதியில் தனியாக தவித்து கொண்டிருந்ததாகவும், அதை பார்த்து கூட்டிவந்ததாகவும் கூறி அவர் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.

தங்கள் மகள் நடிவடிக்கையில் நிறைய வித்தியாசத்தை உணர்ந்த பெற்றோர் அவரை கவுன்சிலிங் அழைத்துசென்றுள்னனர். அங்கு நிஷா கூறியது அனைவரையும் பயங்கர அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

தனது குளியல் வீடியோவை வைத்து அந்த உறவுக்கார பெண் தன்னை லாட்ஜுக்கு அழைத்துச்சென்று பலபேருக்கு விருந்தாக்கியதாகவும், தன்னை வைத்து விபச்சாரம் செய்ததாகவும் நிஷா கூறியுள்ளார்.

இதனை அடுத்து லினட் என்ற அந்த உறவுக்கார பெண்ணையும், லாட்ஜ் நடத்தி வந்த பிரதீப், ரினு, நசீம் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

உறவுக்கார பெண்ணே இளம் பெண்ணை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளியது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo