கீழச்சேரி பள்ளியில் மாணவி தற்கொலை விவகாரம்: ஆய்வு செய்ய நேரில் புறப்பட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர்..!

கீழச்சேரி பள்ளியில் மாணவி தற்கொலை விவகாரம்: ஆய்வு செய்ய நேரில் புறப்பட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர்..!



Keezacherry school student suicide issue: Minister of School Education left to investigate

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் பூசனம் - முருகத்தாள் தம்பதியினர். இவர்களுக்கு 17 வயதில் சரளா என்ற மகள் உள்ளார். சரளா திருவள்ளூர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சி உள்ள தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சரளா அதே பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம்போல் சரளா பள்ளிக்கு செல்ல தயாராகி சக நண்பர்களுடன் பேசி சிரித்து இருந்துள்ளதாக கூறப்படுகிறது. நண்பர்கள் உணவு அருந்தி சென்றுவிட்ட நிலையில் சரளா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இது குறித்து தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த திருவள்ளூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் மரண செய்தியை கேட்டு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென பள்ளிக்கு முன்பு போராட்டம் செய்ய தொடங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் காவல்துறையினர் திருத்தணி - கீழச்சேரி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கீழச்சேரியில் மாணவி சரளா உயிரிழந்த விவகாரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அங்கு புறப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை மேற்கொள்வதுடன், உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.