தெரியுமா?? மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்ட கவிஞர் சினேகன் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா??Kavingar snegan votes count in TN Election 2021

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கவிஞர் சினேகன் பெற்ற வாக்குகள் எத்தனை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி காட்சிகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக கட்சியின் தலைவர் முக. ஸ்டாலின் அவர்கள் விரைவில் பதவியேற்க உள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின், கமல், மன்சூர் அலிகான், குஷ்பு, ஸ்ரீப்ரியா போன்ற பல்வேறு சினிமா பிரபலங்களும் களமிறங்கினர். இவர்களுடன் பிக்பாஸ் புகழ் ஸ்நேகனும் மக்கள் நீதி மய்யம் சார்பாக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.

Snegan

விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் AMV. பிரபாகர் ராஜா 74351 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு அடுத்ததாக அதிமுக சார்பாக போட்டியிட்ட விருகை V.N. ரவி அவர்கள் 55984 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 16939 வாக்குகள் பெற்று பிக்பாஸ் புகழ் கவிஞர் சினேகன் அவர்கள் விருகம்பாக்கம் தொகுதியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.