ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
புதுக்கோட்டை மாவட்டத்தின் வறட்சியை போக்க, காவிரி; வைகை; குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படுமா?
கேரளா மற்றும் கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள செய்திகளை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
காவேரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவேரி ஆற்றின் நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் மக்கள் அவதிப்படுவருகின்றனர். தமிழகத்தின் ஒரு பகுதி இவ்வாறு நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் வேளையில் தஞ்சை திருச்சி மாவட்டங்களுக்கு அடுத்துள்ள புதுக்கோட்டை மாவட்டம் வறட்சியின் பிடியில் உள்ளது.
காவேரி பாசன கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் காவேரி நீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு வீணாக கடலில் கலக்கும் நீரை புதிய கால்வாய்கள் அமைப்பதன் மூலம் வறட்சியாக உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் ஏறி, குளங்களை நிரப்பி மக்கள் பயன்பெறும் வகையில் செய்யலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே தமிழக அரசால் முன்மொழியப்பட்டுள்ள காவிரி, குண்டாறு, வைகை இணைப்புத்திட்டத்தை நிறைவேற்றினால் கூட போதும் என்கின்றனர்.
இந்த திட்டத்தை நிறைவேற்றும் பட்சத்தில் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி வரை வரும், கரூர் மாவட்டத்திலுள்ள மாயனூர் தடுப்பணையின் கடைமடை காவிரி வாய்க்காலை ஆச்சம்பட்டி குளம் வழியாக தச்சங்குறிச்சி, விராலிப்பட்டி, நொடியூர் நத்தமாடிப்பட்டி, மங்கனூர், மின்னாத்தூர், இராமுடையான்பட்டி, அரவம்பட்டி, கந்தர்வகோட்டை, காட்டு நாவல், மட்டங்கால், சுந்தம்பட்டி, நெப்புகை, வேலாடிப்பட்டி என ஏற்கனவே ஓடும் பெரியவாரி வாயிலாக கொண்டுவந்தால் சுமார் 50 க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நிலவிவரும் வறட்சியை கருத்தில் கொண்டு விவசாயத்தையும், நீராதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.