உறங்கிய பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சித்த வி.ஏ.ஓ.. குளித்தலை இலங்கை அகதிகள் முகாமில் பயங்கரம்.!Karur Kulithalai VAO Sexual Harassed Woman Police Arrest

 

மாத்திரை எடுத்துக்கொண்டு உறங்கிய பெண்ணிடம் விஏஓ பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு இலங்கை தமிழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அரசின் சார்பில் அவ்வப்போது மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படுவது இயல்பு. அப்போது, அரசுத்துறை அதிகாரிகள் மருத்துவ முகாமை நேரில் சென்று கவனித்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி நடந்த மருத்துவ முகாமுக்கு சென்ற சிவாயம் வடக்கு கிராம வி.ஏ.ஓ அன்புராஜ் மருத்துவ முகாமுக்கு சென்றுள்ளார். அங்கு வந்த பெண்ணை அபகரிக்க முயற்சித்து, பெண்ணின் விபரங்களை சேகரித்துள்ளார். பின்னர், அரசு அலுவலர் என்ற முறையில் விசாரிப்பதாக நடித்து பெண்ணின் வீட்டை தெரிந்துகொண்டுள்ளார்.

பெண்மணி வீட்டிற்கு சென்று மாத்திரைகளை எடுத்துக்கொண்டு உறங்கவே, அதிர்ச்சியூட்டும் வகையில் வீட்டிற்குள் புகுந்த விஏஓ பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அன்புராஜை கண்டித்து அடித்து நொறுக்கியுள்ளனர். 

Karur

அரசு அதிகாரி என்ற காரணத்தால் ஒருகட்டத்தில் பொதுமக்கள் அன்புராஜை விட்டுவிட, 2 நாட்கள் கழித்து பெண்ணின் வீட்டிற்கு சென்ற அன்புராஜ் இதுகுறித்து வெளியே கூறினால் கடுமையான விளைவை சந்திப்பாய் என அரசு பணி இருக்கும் தோனியில் மிரட்டி இருக்கிறார். 

இதனால் பயந்துபோன பெண்மணி குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விஏஓ அன்புராஜை கைது நீதிமன்றத்தில் சமர்ப்பித்து செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.