துருக்கி இளைஞரை கரம் பிடித்த கரூர் பெண்! குவியும் வாழ்த்துக்கள்!!Karur Girl tied with Turkey Boy

ரூரைச் சேர்ந்த பெண், துருக்கியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர், தற்போது, இருவரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பிரியங்கா என்னும் இளம்பெண் ஒருவர் பி.டெக் பட்டதாரி ஆவார். இவர் டெல்லியில் வேலை செய்துகொண்டிருந்த போது, அங்கு தொழில் செய்த துருக்கியைச் சேர்ந்த அஹமத் கெமில் கயான் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

பின்னர், இருவரும் அவர்கள் காதல் குறித்து வீட்டில் சம்மதம் பெற்று, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கரூரில் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.