
மாடு மேய்க்க சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம்.. சிறுமிக்கு குழந்தை பிறந்து அம்பலமான அதிர்ச்சி தகவல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபள்ளாபூர் மாவட்டம், சிந்தாமணி சிக்கலனேர்பு கிராமத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 24). இதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். தினமும் சிறுமி வீட்டில் வளர்க்கப்படும் பசுமாட்டினை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கமான நிகழ்வாகும்.
சம்பவத்தன்று, சிறுமி தனது வீட்டில் வளர்த்து வரும் பசுமாட்டை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற நிலையில், சிறுமியை பின்தொடர்ந்து சென்ற நவீன் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவதாகவும் மிரட்டி செல்லவே, சிறுமியின் பயத்தை உபயோகம் செய்துகொண்ட நவீன், தொடர்ந்து அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதற்கிடையில், சிறுமி வயிற்று வலிப்பதாக பெற்றோரிடம் கூறவே, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் சிறுமியிடம் மேற்கொண்ட பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரணை செய்தபோது, கண்ணீருடன் தனக்கு நடந்த கொடூரத்தை விவரித்து இருக்கிறார்.
தற்போது, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அவரின் தாய் கோஜ்சாரலஹள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் நவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement