நம்மை நெருங்கியது ஓமிக்ரோன் வைரஸ்..!! கடும் பீதியில் மக்கள்.. 2 பேருக்கு தொற்று உறுதி..

நம்மை நெருங்கியது ஓமிக்ரோன் வைரஸ்..!! கடும் பீதியில் மக்கள்.. 2 பேருக்கு தொற்று உறுதி..



Karnataka 2 members affected by Omikran corona virus

கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போதுவரை அழிந்தபாடில்லை. கொரோனாவை எதிர்க்கு அனைத்து நாடுகளும் இன்றுவரை போராடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் இருந்து இன்னும் நீங்கவில்லை.

கொரோனா 2 வது அலையால் பெரிய இழப்புகளை சந்தித்த இந்தியா, கொரோனா 3 வது அலையில் இருந்து தப்பிக்க கடும் முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. இந்நிலையில்தான் ஓமிக்ரோன் என்ற புதியவகை கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

corona

இதுவரை வந்த கொரோனா வைரசுகளை விட, இந்த ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் கடும் வீரியம் கொண்டது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இந்தியாவில் இதுவரை  ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கடனறியப்பட்டால் இருந்த நிலையில், கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இவர்கள் இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அண்டைமாநிலமான கர்நாடகாவில்  ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதியாக்கிருப்பது தமிழக மக்கள் மத்தியிலும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.