தமிழகம்

பைக் ரேஸ் பந்தய பயிற்சி.. ஜெட் வேகத்தில் பறந்து உடல் கருகி உயிரிழந்த மென்பொறியாளர்.. நெடுஞ்சாலையில் பகீர்.!

Summary:

பைக் ரேஸ் பந்தய பயிற்சி.. ஜெட் வேகத்தில் பறந்து உடல் கருகி உயிரிழந்த மென்பொறியாளர்.. நெடுஞ்சாலையில் பகீர்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெபஸ்டியான். இவரின் மகன் உதயா (வயது 25). இவர் ஐ.டி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் இருந்தவாறு வேலை பார்த்து வருகிறார். இவர் இருசக்கர வாகன பந்தயத்தில் பங்கேற்க பயிற்சியும் எடுத்து வந்துள்ளார். 

தினமும் நாகர்கோவிலில் இருந்து பாளையங்கோட்டை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதற்காக பயிற்சியும் எடுத்து வந்த நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் வழக்கம்போல பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, நாங்குநேரி வாகைக்குளம் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. 

அப்போது, சாலையில் இரண்டு துண்டாகி உடைந்து விழுந்த இருசக்கர வாகனம், திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த உதயாவின் மீதும் தீ பிடித்து, அவர் நிகழ்விடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக நாங்குநேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement