மனைவியை கொலை செய்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து நாடகம்; தவளை போல சிக்கிய கொடூர கணவன்.!

மனைவியை கொலை செய்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து நாடகம்; தவளை போல சிக்கிய கொடூர கணவன்.!


Kanyakumari Nagarcoil Man Killed his Wife

 

தனது மனைவியை குடும்பத்தகராறில் கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டு இருக்கிறான்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், நேசமணி நகர் பகுதியில் வசித்து வருபவர் முகமது உசேன். இவரின் மனைவி ரெஜினா பானு. முகமது உசேன் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், சம்பவத்தன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மனைவி எழாததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

மருத்துவமனையில் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து, ரகசியமாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

kanyakumari

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முகமது உசேனிடம் நடத்திய விசாரணையில், குடும்ப சண்டையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 

இதனையடுத்து, முகமது உசேனை கொலை செய்த நேசமணி நகர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.